இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ் பவர் ஷான் ரோல்டன். இவர் வாயை மூடி பேசவும் என்னும் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமா திரையுலகுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் வேலையில்லா பட்டதாரி 2, ஜெய் பீம் போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலமாக மக்களிடையே பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் தனி ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதில் ஆர்வம் கொண்டு இவர் தற்போது புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்து இருக்கின்றார். ஒரு நிமிடம் உள்ள இந்த பாடலின் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Categories
பிரபல இசையமைப்பாளரின் ஒரு நிமிட பாடல்… வைரலாகும் வீடியோ…!!!!
