இந்திய ராணுவத்தில் கௌரவ கர்னல் பட்டம் பெற்ற இந்தியர் பாலசுப்பிரமணியம் காலமானார்.
தமிழகத்தை சேர்ந்த கல்வியாளரும், இந்திய ராணுவத்தில் கௌரவ கர்ணன் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ஏ.பாலசுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 75. அவர் 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர்களில் பங்கேற்றார். அவர் 22 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றியவர். அதன்பிறகு பாதுகாப்புப் படையினருக்கான முதல் வணிக பள்ளியைத் தொடங்கினார்.
அதன் மூலம் பலருக்கும் சேவையை செய்து வந்தார். இவர் தமிழகத்தை சேர்ந்த ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்து சாதனைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரின் இழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.