Categories
தேசிய செய்திகள்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா: இவர்களுக்கும் வீடு…. மத்திய அரசு போட்ட திட்டம்…!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த அரசாங்க வீட்டு வசதி திட்டத்தில் பயன் அடைந்து இருக்கக்கூடாது.

இத்திட்டத்தை விரிவுபடுத்தும் பணியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் கௌஷல் கிஷோர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் போன்ற ஏழைமக்கள் இந்த திட்டத்தில் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |