Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… சென்னையில் கடைகளை மூட உத்தரவு…. போக்குவரத்து திடீர் மாற்றம்… முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகிறார். பிரதமர் 5.45 மணி முதல் இரவு 7 மணி வரை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சி 31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 கூடுதல் காவல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள், 29 துணை ஆணையர்கள்,80 உதவி ஆணையர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கார் செல்லும் சாலையில் 5 அடிக்கு ஒரு காவலர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறார். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பிரதமர் செல்லும் சாலையில் சோதனை செய்கின்றனர். பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் உள் விளையாட்டு அரங்கம் பெரியமேடு ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி வரும் நேரத்தில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விமானத்தில் சென்றடையும் வரை கடைகளை மூட சென்னை காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதனைப் போலவே நிகழ்ச்சி முடிந்து சாலை வழியாக விமான நிலையத்திற்கு பிரதமர் செல்வதால் கார் செல்லும் சாலைகளிலும் கடைகளை மூட வேண்டும் என்று வியாபாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதில் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பெரியமேடு பகுதியில் உள்ள சாலைகள், ஈ.வெ.ரா சாலை, ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் மெதுவாகவே செல்ல முடியும் என்பதால் மாற்று சாலைகளை பயன்படுத்த வேண்டுமென்று பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இரவு நிகழ்வு முடிந்த பிறகு நேரு விளையாட்டு அரங்கில் இருந்து விமானம் நிலையம் செல்லும் சாலைகள் அனைத்து பிரதமர் செல்வதற்காக பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |