இந்திய பிரதமர் மோடியிடம் ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒரு வருட காலத்திற்கு இருப்பார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ஜி20 தலைமைக்கான கருப்பொருள் மற்றும் லோகோவை வெளியிட்டார். இந்நிலையில் ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை டெல்லி சென்று விட்டு மீண்டும் மாலையில் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு நாளை நடைபெறும் மாநாடு ஒரே பூமி-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம் என்ற குறிக்கோளுடன் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஜி20 மாநாடு நடைபெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதால், தமிழ்நாட்டிலும் ஜி20 மாநாடு நடைபெறும் இடம் குறித்தும் நாளை ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.