பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சேலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
சேலம் தலைமை தபால் நிலையம் நிலையத்தில் இருந்து, பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான கடிதம் சென்றுள்ளது. இது குறித்து மத்திய புலனாய்வுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சேலம் மாவட்டத்திலிருந்து ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியவர்களின் விவரங்களை வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.