பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை இப்போது இருந்தே செய்யத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதியன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கவும் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.