Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடி சொன்னாரா ? ஓபிஎஸ் எங்கே போனால் என்ன ? பிஜேபிக்கே நாங்க தான் தலைமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ,  இங்கிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பிறகு யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அண்ணா திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார், அதற்கு பிறகு எந்த முடிவாக வேண்டுமானாலும் இருக்கலாம், சசிகலாவுடன் சேரலாம், திமுகவுடன் சேரலாம்.

யார் கூட வேண்டுமானாலும் சேரலாம். ஏனென்றால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடைய நிலைப்பாட்டை பற்றி நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது, அவர் எந்த நிலைப்பாடு அவருக்கு சரியாக இருக்கிறதோ, அதை அவர் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, சீமான், பாஜக என அனைவரும் ஒன்றாக மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளதா என்ற கேள்விக்கு,

ஏற்பாடு செய்யப்பட்டது என்று மோடி இதுவரைக்கும் சொல்லி இருக்கின்றாரா? இல்லை என்றால் எங்கள் கட்சி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி அவர் சொல்லி இருக்கிறாரா? நாங்கள் சொல்லப்படாத கருத்து, ஆதாரம் இல்லாத கருத்திற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற பொது தேர்தலாக இருந்தாலும் சரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி அமையும். எங்களோடு கூட்டணிக்கு வருகின்றவர்கள்,  எங்கள் தலைமையை ஏற்று வருகின்றவர்களை கூட்டணியில் சேர்ப்போம்.

இதுதான் அண்ணா புரட்சித் தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, இன்றைக்கு எடப்பாடியார் காலத்திலும் சரி,  இரண்டு தலைமையில் இருக்கும்போது கூட அண்ணா திமுக தலைமையில் தான் இருந்தது. இன்றைக்கு ஒற்றை தலைமையிலும் முடிவான பிறகும்,  எடப்பாடி தலைமையில் இன்றைக்கு ஒட்டுமொத்த அனைத்து இந்திய திராவிட முன்னேற்ற கழகம் கட்டுக்கோப்பாக இருக்கிறது, அதிமுக தலைமையை ஏற்று யார் வந்தாலும் அவர்களுடன்  வெற்றி கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |