சென்னை மாமல்லபுரத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில் 144 ஊரடங்கு சட்டப்பிரிவின் கீழ் பலூன்களை பறக்க விட தடை விதிக்கப்படுகிறது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் சென்னை விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக் கழகம், ஐஎன்எஸ் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக சிலர் கருப்பு பலூன்களை பறக்க விட கூடும் என்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.