இந்திய பிரதமர் மோடி சிறந்த நபர் என்றும் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி சிறந்த நபர் என்றும் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது, ” பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கின்றது.
நான் அமெரிக்க அதிபராக இருந்த போது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் மோடி சிறந்த நபர். அவர் முன் நிறைய சவால்கள் இருந்தும். அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகின்றார். அவரது பணி அபாரமானது. இன்றும் அவர் எனக்கு சிறந்த நண்பர் தான்” என்று அவர் கூறியுள்ளார்.