பிரதமர் மோடி குறித்து அமேசானில் வெளியான புத்தகம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் ஸ்ட்ரோக்: இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உதவிய மோடியின் 420 ரகசியங்கள் என்ற அந்தப் புத்தகத்தை பெர்சோகர் பக்த் என்பவர் வெளியிட்டுள்ளார். 56 ரூபாய் விலையில் விற்கப்படும் அந்த புத்தகத்தில் எதுவும் எழுதாமல் 56 பக்கங்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடியைக் கிண்டலடிக்கும் வகையில் இருந்த அந்த புத்தகம் அமேசானில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தகம் குறித்து பல புகார்கள் எழுந்த நிலையில் அமேசானில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.