ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். அவரின் பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆந்திர மாநில பீமாவரத்தில் விடுதலை போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜுவின் 125 வது பிறந்த நாள் விழாவில் மோடி பங்கேற்றார். அப்போது அவரது 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், மத்திய சுற்றுலா அமைச்சர் கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி முடிந்தது பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டபோது, விழா மேடையில் மோடி அருகில் நின்று கொண்டிருந்த பிரபல நடிகையும் ,ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா அவருடன் செல்பி எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் பிரதமர் மோடியுடன் அமைச்சர் ரோஜா எடுத்துக் கொண்ட செல்பி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.