Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள்”…. வரும் 17 ஆம் தேதி முதல்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் அடிப்படையில் பரிசுகள், நினைவுப் பரிசுகள் போன்றவற்றை அவ்வப்போது ஆன்லைன் வாயிலாக ஏலம் விடப்படுகிறது. அந்த அடிப்படையில் ஏற்கனவே 3 முறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடந்துள்ள நிலையில், 4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தின் மூலம் வருகிற 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலதரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இடம் பெறுகிறது. இந்த முறை விளையாட்டு மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய வீரர்களின் விலையுயர்ந்த பரிசுகளும் ஏலத்தில் இடம்பெறுகிறது.

1,200-க்கும் அதிகமான பரிசுப்பொருள்களின் ஆரம்ப விலையானது ரூபாய்.100 -ரூ.10 லட்சம் வரை இருக்கும். பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் பரிசுகளின் சிறப்புக்கண்காட்சி புது தில்லியிலுள்ள தேசிய நவீன கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது, “பரிசுகளாகப் பெறப்பட்ட 1,000க்கும் அதிகமான பொருள்களின் தொகுப்பைக் காட்சிப்படுத்துவது ஒரு மரியாதை. இது தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அனைத்து பரிசுப்பொருட்களும் செப்டம்பர் 17ம் தேதி முதல் ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. அத்துடன் இந்த வரலாற்று சிறப்புமிக்க பரிசுப்பொருள்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து வாங்கிச் செல்லலாம்.

ஏலத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் பரிசளித்த ராணி கமலாபதி சிலை, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமன் சிலை, சூரிய ஓவியம், ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பரிசளித்த திரிசூலம் போன்றவை அடங்கும். ஏலம் விடப்படவுள்ள பொருட்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பரிசளித்த கோல்ஹாபூரில் அமைந்துள்ள மகாலட்சுமி தேவியின் சிலை மற்றும் ஆந்திரம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பரிசளித்த வெங்கடேசப் பெருமானின் படம் போன்றவை அடங்கும். அதுமட்டுமின்றி பிரதமர் மோடி திறந்து வைத்த இந்தியா கேட்டிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிறப்பு முன் மாதிரி சிலையும் ஆரம்ப விலையாக ரூபாய்.5 லட்சத்தில் ஏலம் விடப்படும். ஜனவரி 2019ல் பிரதமர் அலுவலகத்தால் முதல் ஆன்லைன்ஏலம் துவங்கப்பட்டது. சென்ற காலத்தைப் போலவே ஏலத்தின் வாயிலாக கிடைக்கும் நிதி, மத்திய அரசின் முக்கிய திட்டத்திற்கும், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படும்.

Categories

Tech |