Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உரை… யூட்யூபில் டிஸ்லைக்… பாஜக தீட்டிய திட்டம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய காணொளி காட்சி பாஜகவின் யூடியூப் பக்கத்தில் 4500 க்கும் அதிகமான முறை டிஸ் லைக் செய்யப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த கட்டுப்பாடுகளில் தற்போது தளர்வுகள் விடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு தளர்வு ஐந்தாம் நடவடிக்கை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அந்த நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தியாவில் திருவிழாக் காலம் தொடங்கி உள்ளதால், இந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அந்த காணொளி சமூக ஊடகங்களில் விவாதப் பொருள் ஆகியது. அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4500 க்கும் அதிகமான முறையில் அந்த காணொளி காட்சியில் டிஸ் லைக் செய்யப்பட்டது. அதனால் அந்த காணொளியில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்கள் அனைத்து வைக்கப்பட்டன. இதற்கு முன்னதாக கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியின் உரைகள் பாஜகவின் யூடியூப் பக்கத்தில் லட்சக்கணக்கில் டிஸ்லைக் செய்யப்பட்டன.

 

Categories

Tech |