பிரதமருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நன்றி கூறியுள்ளார்.
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் விழாக்காலம் போல் காட்சி அளிக்கிறது. நம்முடைய பாரத பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்து தமிழகத்தின் பெருமை மற்றும் தமிழ் மக்களின் அன்பை குறிப்பிடும் போதெல்லாம் தமிழக மக்கள் பாரத பிரதமரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனையடுத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த பாரத பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சென்னைக்கு வந்த போது பாரதப் பிரதமரின் வருகையை எதிர்பார்த்து சாலையின் இரு பக்கமும் பொதுமக்களும், பாஜக கட்சியின் தொண்டர்களும் நீண்ட நேரம் காத்திருந்து, பிரதமர் வந்த போது கையசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தங்களுடைய அன்பு தலைவரை காண்பதற்காக பொதுமக்களும் பாஜக கட்சியின் தொண்டர்களும் நீண்ட நேரம் காத்திருந்ததை பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பாரத பிரதமர் வரும்போது ஒயிலாட்டம், கரகாட்டம், குதிரை ஆட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மேல தாளங்கள் என பிரதமரின் காரை வரவேற்ற சம்பவம் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, கலை நிகழ்ச்சிகள் நடத்திய அனைத்து கலைஞர்களுக்கும், தமிழ் மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும், உங்கள் கைகளை என்னுடைய கண்களில் ஒற்றிக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ள ஆறும்.