பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட உள்ளது.
பாரத ரத்னா விருது பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பிப்ரவரி மாதம் தனது 92 வயதில் காலமானார். அவரது நினைவாக இந்தாண்டு முதல் “லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது” வழங்கப்படும் என தீனநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முதல் விருது தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுகிறது.
நாட்டிற்கும் மக்களுக்கும் அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி லதா மங்கேஷ்கரரை தனது மூத்த சகோதரி என்று அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.