இந்தியாவில் கடந்த 2015-ஆம் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 1.12 கோடி வீடுகள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி குடும்ப தலைவியே வீட்டிற்கு உரிமையாளர் ஆவார். இந்தத் திட்டத்தில் இதுவரை 61.01 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 101.01 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் நீங்களும் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் உங்களுக்கு வீடு கிடைக்குமா? அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? என்பதை எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முதலில் https://pmaymis.gov.in/என்ற இணையதள முகவரிக்கு சென்று, search Beneficiary என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் எண் நம்பரை உள்ளீடு செய்து தேட வேண்டும். இதனையடுத்து உங்களுக்கு வீடு கிடைப்பதற்கான தகுதி இருக்கிறதா என்பது தெரியும்.