பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை 8 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் 9வது தவணை எப்போது செலுத்தப்படும் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 9வது தவணையாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி 2000 ரூபாய் செலுத்தப்படும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்தார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வருடந்தோறும் 4 மாதங்களுக்கு ஒரு முறை என மொத்தம் 3 தவணையாக நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் தவணை ஏப்ரல் 1 – ஜூலை 31 காலகட்டத்திலும், இரண்டாம் தவணை ஆகஸ்ட் 1 – நவம்பர் 30 காலகட்டத்திலும், மூன்றாம் தவணை டிசம்பர் 1 – மார்ச் 31 காலகட்டத்திலும் வழங்கப்படுகிறது.
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததா என எப்படி தெரிந்து கொள்வது?
1. பிரதமரின் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லுங்கள்
2. வலதுபுறத்தில் உள்ள ‘Farmers Corner’ என்பதை க்ளிக் செய்க
3. அதில் ‘Beneficiary Status’ என்பதை க்ளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும்
4. திறக்கப்படும் புதிய பக்கத்தில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் எல்லது மொபைல் எண் என ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்யவும்
5. பின்னர் ‘Get Data’ என்பதை க்ளிக் செய்க
6. இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததா? எப்போது கடைசியாக பணம் வந்தது என பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்