பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை மானபங்கம் செய்ததாக பிரதமர் கட்சி அலுவலகத்தின் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் சைபுல்லா ஜான். இவர் நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்புகளை விமர்சனம் செய்யும் பிரபலமான பத்திரிகையாளரும், சர்சாத பிரஸ் கிளப் ஆளும் குழுவின் உறுப்பினரும் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இவர் அப்துல்லா, அவரது சகோதரர் பாஹிம், ஜகாத் கமிட்டி தலைவர் இப்திகார் மற்றும் சிலர் சர்சாத பஜாரில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும் அதனை வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு சர்தாரி காவல்துறைக்கு மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது ஷோயிப் ஆணையிட்ட போதிலும் காவல்துறையினர் தாமதப்படுத்தியதாகவும், சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை எப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி சைபுல்லா காவல்துறையில் அளித்த புகாரில் 5 தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டதாகவும் அதில் இருந்த ஜகாத் கமிட்டி தலைவர் இப்திகார் பெயரை மட்டும் கால்துறை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
எனவே பெஷாவர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க வில்லை என்பதால் உள்ளூர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.