Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் சமந்தா….? இணையத்தில் இப்போ இது தான் டிரெண்ட்….!!!!

நடிகை சமந்தா பிரதமர் மோடி குறித்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் மோடிஜின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். மற்றோரு வீடியோவில், “நான் மோடியின் ஆதரவாளர். அவர் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வார் என நான் நம்புகிறேன்” என பேசியுள்ளார்.

இந்த வீடியோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா பேசிய வீடியோ. பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய போது திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது சமந்தா பேசிய விடியோவைதான் தற்போது இணையத்தில் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |