Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக…. கொரோனா கட்டுப்பாடுதான் வேண்டும்… சுப்பிரமணியன் சுவாமி அதிரடி..!!

பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்கு பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்  குழு அமைக்க வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன.

இதுவரை இரண்டு கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் மருத்துவத்துறை வல்லுனர்களும், அறிவியல் துறைகளில் வல்லுநர்களும் கொரோனாவின் மூன்றாம் அலை  பரவ வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர். மேலும் கொரோனாவின் மூன்றாம் அலை  குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் கொரோனாவின் மூன்றாம் அலை பேராபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். நமக்கு கொரோனவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்கு பதிலாக தீவிரமான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு குழு தேவை என்று கடுமையாக மோடியை சாடியுள்ளார்.

Categories

Tech |