Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் கவுரவத்தொகை திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!

பிரதமரின் கவுரவத் தொகை திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணையதளத்தில் இணைக்கவேண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் “பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவத் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு 3 தவணையாக தலா ரூபாய்.2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகளுக்கு முன்பே 11 தவணைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 12வது தவணைத்தொகையை தொடர்ந்து பெற வேண்டுமானால் விவசாயிகள் சுய விபரங்களை, அதாவது ஆதார் எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண் போன்றவற்றை அருகிலுள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று உரிய இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவேண்டும்.

அத்துடன் பதிவுசெய்த தகுதியான விவசாயிகள் தங்களின் நில ஆவணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் சரிபார்ப்புச் செய்தால் மட்டுமே 12வது தவணைத்தொகை கிடைக்கப்ப பெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆகவே விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டகலைத் துறை, வேளாண் வணிகத்துறை அலுவலகங்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொண்டு நேரில் தங்களது நில ஆவணங்களை உடனே சமா்ப்பிப்பதன் வாயிலாக இந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடையலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |