பிரதமர் நரேந்திர மோடி , “பிரதமரின் கதி சக்தி திட்டம்” தொடர்பான இணையவெளி கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கதி சக்தி திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும். அது மலிவான விலையில் இருப்பதோடு, பேரழிவுகளை தாங்கி நீடித்து நிற்க கூடியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மத்திய அரசு ஒருங்கிணைந்த கூட்டாட்சியை வலுப்படுத்தும் விதமாக ரூபாய் ஒரு லட்சம் கோடி மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்க முடிவெடுத்துள்ளதாகவும், மாநில அரசுகள் கட்டமைப்புகளை மேம்படுத்த இந்த நிதியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கண்ணாடி ஒளியிழை குழாய் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நெடுஞ்சாலைகள் உட்பட ஒவ்வொரு துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.