Categories
அரசியல்

பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல….. மன அழுத்தமா? உதவிட காத்திருக்கும் உதவி மையங்கள்…..!!!!!

மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம் . தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி நேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன .

2015 இல் 828,000 இறப்புக்கள் தற்கொலைகளால் நிகழ்ந்துள்ளன. 1990 இல் இது 712,000 இறப்புக்களாக இருந்தது. உலகளாவிய ரீதியில் மரணத்திற்கு காரணமாக விளங்கும் 10 வது முக்கிய காரணியாக தற்கொலை கருதப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், உலகில் கிட்டத்தட்ட 800000 பேர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலையால் இறப்பதாக குறிப்பிடுகின்றது. மேலும் 15-29 வயதுக்கிடைப்பட்டோரில், தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைவதாகவும், 78% மான தற்கொலைகள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நடப்பதாகவும் குறிப்பிடுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான இளம் வயதினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. பிரச்சனையை எதிர்த்து போராடுவதே வெற்றியின் அடையாளம். தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவதற்கு பல்வேறு ஹெல்ப்லைன் உதவி மையங்கள் இருக்கின்றன. அவற்றின் உதவி நாடினால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.  மனதில் தற்கொலை எண்ணம் உதித்தவர்கள், என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம்.

சினேஹா தற்கொலை தடுப்பு மையம் 044-24640050.

கோவை விடியல் 422-2300999.

மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் – 104 .

தேசிய தற்கொலை தடுப்பு வரி 1-800-273-பேச்சு (8255.

இந்தியா ஆஸ்ரா உதவி எண்: +91-22-27546669 அல்லது +91-22-27546667.

 

Categories

Tech |