Categories
மாநில செய்திகள்

பிரச்சாரங்களுக்கு தடையில்லை… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

கொரோனா அதிகமாகி வருவதால் தேர்தல் பிரச்சாரங்களை தடைசெய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு ஊர் ஊராக சென்று பிரச்சாரத்தை செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும் இவ்வாறு பிரச்சாரம் செய்வதால் மக்கள் கூட்டமாக கூடுகின்றனர். இதன் மூலம் நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை இன்று உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது.

விசாரணையில் தேர்தலுக்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதால் தடைவிதிக்க முடியாது. மக்கள் கூடும் பிரசார கூட்டங்களில் தனிமனித இடைவெளி போன்றவற்றை கடைப்பிடித்து பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |