சிறப்பாக நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் புகழ்பெற்ற குந்தவேல் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன்பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேப்போன்று குளத்தூர் சரவனாபுரம் ஆறுமுகப் பெருமான் கோவில், சங்கராபுரம் பூட்டை முருகன் கோவில், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.