Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர்த்  திருவிழா தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மனை மலர்களால் அலங்காரம் செய்து தேரில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |