Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பக்தி இன்னிசை, தோல்பாவைக்கூத்து, சமய சொற்பொழிவு, வாகன பவனி போன்றவைகளை நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.

இந்த தேர்த்திருவிழாவின் போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம்  செய்யப்பட்டு பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10-ம் திருவிழாவில் சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் தெப்பத்திருவிழா நடைபெறவிருக்கிறது.

Categories

Tech |