Categories
தேசிய செய்திகள்

பிரசித்தி பெற்ற சபரிமலை கோவில்…. தரிசனத்திற்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்காக…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் நடை திறக்கப்பட இருப்பதால் தரிசனத்திற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கொரோனா பரவால் காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 2020-ம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பிறகு மாதாந்திர பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியதால் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாதம் ஆனி மாத பூஜைகளுக்காக 14-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, உச பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது.

இந்த பூஜைகள் அனைத்தும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது ஆடி மாத பூஜைகளுக்காக வருகிற 16-ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பூஜையானது 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த 5 நாட்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவானது நேற்று முதல் தொடங்கியுள்ளது.

Categories

Tech |