தர்மபுரி மாவட்டத்தில் தட்சணகாசி காலபைரவர் கோவிலில் உலக நன்மைகளுக்காக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் உலக நன்மைக்காக 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. முன்னதாக சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று இருந்தது. அதன்பின் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனை அடுத்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜீவானந்தம் கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.