Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில் …. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள் …. !!

அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னார்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளரஈஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில்  பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த  ஏராளமான பக்தர்கள் அம்மன் மற்றும் கருப்பசாமியை   தரிசனம் செய்துள்ளனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |