மிகவும் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேம்பத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆவுடையநாயகி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 88 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 48-வது நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
இந்நிலையில் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து மாலை ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர். இந்த திருவிழாவில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.