உலக நாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பூஜைகள் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உலக நாயகி சமேத உலகநாத சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் வரும் 2 பிரதோஷங்களை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் உலக நாயகி சமேத உலகநாத சாமிக்கும் பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றது.
அதன் பின்னர் உலக நாயகி சமேத உலகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் கோவில் உள் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்