ராமசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதைப்போல் இந்த ஆண்டு கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனுமந்த வாகனம், இந்திர விமானம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் வீதி உலா நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நாளான நேற்று ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோருக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து நடைபெற்ற தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமியை தரிசனம் செய்துள்ளனர்.