அழகர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் ஆற்றங்கரை ஓரத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னப்பறவை பூத வாகனத்தில் ஆனந்தவள்ளி-சோமநாதர் வீதி உலா நடைபெற்றது. மேலும் வருகின்ற 14-ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் 15-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர்.