முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுகிறது. இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்னர் அம்மனுக்கு பால்,பலம், திருநீர் ,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.