Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கத்தி போடும் நிகழ்ச்சி…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

சிறப்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் சிறுவர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்க தேரின் முன்பாக சிறுவர்கள் கத்திப் போட்டுக் கொண்டே நடந்து சென்றனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |