பிரசித்தி பெற்ற கோவிலின் குண்டம் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே காந்திநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பூக்குழி திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் பறவை காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதன்பிறகு பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இதைப்போன்று இடுக்கொரை அருள் நகரிலும் ஒரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் கையில் குழந்தைகளை ஏந்திக்கொண்டு பூக்குழி இறங்கினார்கள். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.