தை வெள்ளிக்கிழமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.