Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்ல இத ரத்து செஞ்சிட்டாங்க…. இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு…. தேனி மாவட்டம்….!!

தேனியில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெறவிருந்த சித்திரை திருவிழாவை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் பிரசித்தி பெற்றதாக விளங்கக்கூடிய கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவை விழா கமிட்டி குழு வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மேலும் இத்திருவிழாவிற்கு தேனியிலிருந்து மட்டும் ஆட்கள் வராமல் வெளி மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இதில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் நடைபெறவிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவின் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கோவில் திருவிழாவிற்கு அரசு தடை உத்தரவை பிறப்பித்தது. இதனால் கவுமாரியம்மன் கோவிலிலும் நடைபெறவிருந்த சித்திரை திருவிழாவை ரத்து செய்ததாக இந்து சமயத்தின் அறநிலைத்துறையினுடைய செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.

Categories

Tech |