சனிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எலுமிச்சங்காய்பட்டி சீனிவாச பெருமாள் கோவில்,அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில்,சிப்பிபாறை பெருமாள் கோவில்,செவல்பட்டி வரதராஜபெருமாள் கோவில்,ரெட்டியபட்டி பெருமாள் கோவில்,கோமாளி பட்டி சீனிவாச பெருமாள் கோவில்,கோவில் ஆகிய கோவில்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.