உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த விழாவினை காண வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த வருடத்திற்கான கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக தீபத்திருவிழா நட த்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் பெற உள்ளது.
இந்த விழாவையொட்டி கொடியேற்றத்திற்கு முன்னதாக மூன்று நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை காலை 5.30 மணியிலிருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 6-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும் அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதன் பின் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.