Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா…. தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள்…. போலீஸ் தடியடி….!!

திருவிழாவிற்கு சென்ற திருநங்கைகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்திருந்தனர். இந்நிலையில் திருவிழா முடிந்ததும் திருநங்கைகள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகினர்.

அப்போது 2 திருநங்கைகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி 2 பேரின் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த காவல்துறையினர் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தனர். ஆனால் திருநங்கைகள் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதன்பிறகு திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |