அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முடிதிருச்சம்பள்ளியில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் வருடந்தோறும் மகாசிவராத்திரியின் மறுநாள் மயானகொள்ளை திருவிழா நடைபெறும். அதேபோல இந்த வருடமும் மகாசிவராத்திரியின் மறுநாள் மயானகொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த மகாசிவராத்திரியை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.