Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ராவத்தநல்லூரில் புகழ் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து சுவாமிக்கு வடைமாலை சாத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதேபோன்று சங்கராபுரம் பகுதியில் வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு ராமபிரானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |