பிரசாந்த் நீல் “சலார்” திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
கேஜிஎஃப் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் கேஜிஎஃப்2 திரைப்படம் உருவாகியிருக்கின்றது. இத்திரைப்டமானது யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த இந்தப் படத்தின் பிரமோஷன் விழாவில் இயக்குனர் பிரசாந்த் நீல் பேசியுள்ளதாவது, இவரின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சலார் திரைப்படத்தை பற்றி அப்டேட்டை கூறியுள்ளார்.
இந்த படமானது கேஜிஎஃப் போல இல்லாமல் புதிய கதையாக இருக்கும் எனவும் படத்தின் பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் இவரின் இந்த அப்டேட்டை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சலார் திரைப்படமும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றார் குறிப்பிடத்தக்கது.