நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தார்.
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் மருத்துவமனை இருந்ததால், அவர் தனது சைக்கிளில் மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு 10 நிமிடத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்ததை ஜூலி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இவர் கடந்த 18 ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.