கேரள மாநிலம் இடுக்கி அடுத்த தொடுபுழா கனி மண்ணூர் கிராமத்தில் பிரசவித்த உடனே தாய், பிறந்த பச்சிளம் குழந்தையை வைக்க தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிக ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பெண் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரும் அவருடைய கணவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்ததும் அதன் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்து உள்ளதாகவும் சடலம் வீட்டில் இருப்பதாகவும் பெண் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.