ஒடிசா மாநிலத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு 1 முதல் 7 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் பிப்ரவரி 28 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத கற்கும் சூழலை உருவாக்கும் வகையில் அவர்களின் உணர்வுபூர்வமான நல் வாழ்வை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதில் மாணவர்களுக்கு நல்லுறவை கட்டியெழுப்பும் பயிற்சி உள்பட பல பயிற்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் உருவாகும் பயிற்சி ஒரு வார காலத்திற்கு நடத்தப்பட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒவ்வொரு குழந்தையும் கற்றல் நிலை மற்றும் கற்றல் இழப்பை கண்டறிதல் மொழி, கணிதம் மற்றும் ஆங்கிலத்திலும் குழந்தைகளின் அடிப்படை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மூளைக்கு வேலை தரும் வகையில் ஒரு வகையில் வார்த்தை, புது விளையாட்டு, பழங்களின் பெயர், விலங்குகளின் பெயர், கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.