2021- 2022 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் கடைசி தேதி நெருங்கி வருவதால், வருமான வரி செலுத்துவோருக்கு நினைவூட்டும் விதமாக நோட்டீஸ் அனுப்பி வருகிறது வருமான வரித்துறை.
மேலும் எல்லா நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்துமாறு வருமான வரி துறை கேட்டுக்கொண்டுள்ளது. கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். தாமதமான வரி வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு அவரவர் வருமானத்திற்கு ஏற்ப 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருமான வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தியவர்களுக்கு அதை சரி பார்ப்பதற்காக காலஅவகாசம் பிப்ரவரி-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக எலெக்ட்ரானிக் முறையில் செலுத்தியவர்களுக்கும் இந்த முறை பொருந்தும்.